கட்டாய லீவில் அனுப்பப்பட்டவர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 1 April 2023

கட்டாய லீவில் அனுப்பப்பட்டவர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தீர்மானங்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை தூண்டி விட முயன்ற பின்னணியில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டவர்கள் தமது குறைகளை மஹிந்த ராஜபக்சவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.


மஹிந்த தலையிட்டு இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைப் பெற்றுத் தருவார் என அவரை சந்தித்த தொழிற்சங்கவாதிகள் தெரிவிக்கின்றனர்.


எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment