SJBயை அழிக்க சதி நடக்கிறது: சஜித் - sonakar.com

Post Top Ad

Saturday 1 April 2023

SJBயை அழிக்க சதி நடக்கிறது: சஜித்

 



தமது கட்சி உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, லஞ்சம் கொடுத்து கட்சியை அழிப்பதற்கான சதி நடப்பதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகய தலைவர் சஜித் பிரேமதாச.


தேர்தலை நடாத்த பணம் இல்லையென்று சொல்லிக் கொள்ளும் அரசு, தமது கட்சிக்காரர்களுக்கு பாரிய அளவில் பணத்தை வழங்கி எதிர்க்கட்சியை அழிக்க முயல்வதாகவும் தெரிவிக்கும் சஜித், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா விலை பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.


மஹிந்த காலத்தில் ஐ.தே.கட்சி உறுப்பினர்களை காப்பாற்றும் தேவை ரணிலுக்கு இருந்தது போலவே தற்போது தமது சூழ்நிலை எனவும் சஜித் தெரிவிப்பதோடு, தமது கட்சிக்காரர்கள் அவ்வாறு தாவிச் செல்லப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment