1000 ரூபாவால் குறையும் சமையல் எரிவாயு விலை - sonakar.com

Post Top Ad

Monday 3 April 2023

1000 ரூபாவால் குறையும் சமையல் எரிவாயு விலை

 லிட்ரோ சமையல் எரிவாயு (12.5 கி.கி) விலை நாளை நள்ளிரவுடன் ஆயிரம் ரூபாவால் குறையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைந்துள்ள நிலையில், தமது நிறுவன வரலாற்றிலேயே இவ்வாறு பாரிய குறைப்பு இடம்பெறுவது இதுவே முதற்தடவையென குறித்த நிறுவனம் தெரிவிக்கிறது.


நாளை 4ம் திகதி காலை உத்தியோகபூர்வமாக இவ்வறிவிப்பு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment