ஐக்கிய தேசியக் கட்சி - சமகி ஜன பல வேகய பிரிவு நாடகம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்து வருகின்ற நிலையில், சஜித் திரும்ப வந்தால் அவர் தான் பிரதித் தலைவராவார் என தெரிவிக்கிறார் ருவன் விஜேவர்தன.
பெரமுனவினரின் குழப்பங்களுக்கு மத்தியில் தமக்கான ஆதரவு தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜனாதிபதி ரணல், நாடாளுமன்றில் தற்சமயம் எதிர்க்கட்சியாக இருக்கும் சமகி ஜன பலவேகயவை தம்மோடு அரவணைத்துக் கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையிலேயே, ருவனின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:
Post a Comment