SJB மக்களிடம் 'அடி' வாங்கப் போகிறது: டயானா - sonakar.com

Post Top Ad

Friday 10 March 2023

SJB மக்களிடம் 'அடி' வாங்கப் போகிறது: டயானா

 



நாட்டின் பொருளாதாரம் மீண்டும் தலை தூக்கி வருகிறது, ஹோட்டல்கள் நிரம்பி வருகிறது, இந்நிலையில் போராட்டங்கள் எனும் பெயரில் நாட்டின் அமைதியைக் குலைக்க சமகி ஜன பல வேகய தரப்பு முயன்று வருவதாக தெரிவிக்கிறார் டயானா கமகே.


இதற்கெதிராக மக்களே கொதித்தெழுந்து சமகி ஜன பல வேகயவினரை அடித்து விரட்டும் சூழ் நிலைய உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், குறித்த கட்சியினர் நாடாளுமன்றுக்கு வருவதற்கு தாமே 'விசா' வழங்கியதாகவும் தெரிவிக்கிறார்.


தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த டயானாவுக்கு மக்கள் பிரச்சினையை பேச உரிமையில்லையென சமகி ஜன பல வேகய உறுப்பினர் துசாரா தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே டயானா இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment