ஏப்ரலிலும் இல்லாவிட்டால் போராட்டம் தான்: சஜித் - sonakar.com

Post Top Ad

Friday 10 March 2023

ஏப்ரலிலும் இல்லாவிட்டால் போராட்டம் தான்: சஜித்

 ஏப்ரல் 25ம் திகதியும் அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை நடாத்தாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை நடாத்தப்போவதாக எச்சரிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


மக்கள் அபிலாசைகளுக்கு எதிராகவே அரசாங்கம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர், மக்கள் சக்தியை திரட்டும் பலம் தமது தரப்புக்கு இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.


எதிர்வரும் தேர்தலில் இடதுசாரிகளுக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மும்முரமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment