பொறுமையிழந்து தவிக்கும் பெரமுன MPக்கள் - sonakar.com

Post Top Ad

Sunday 26 March 2023

பொறுமையிழந்து தவிக்கும் பெரமுன MPக்கள்

 



ரணில் ஜனாதிபதியான பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும், அதனூடாக தமக்கும் அமைச்சு பதவிகள் கிடைக்கும் என்ற நீண்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுமையிழந்து, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சில மாதங்களுக்கு முன்பாக இவ்வாறு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியினர் வழங்கியிருந்த அதேவேளை, இதுவரை ஜனாதிபதி தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படாததல் மாற்று நடவடிக்கை குறித்து ஆராய்வதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும், உள்ளூராட்சி தேர்தலுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க முனைவதாகவும் அரசியல் மட்டத்தில் ஊகங்கள் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment