டிசம்பருக்குள் தேர்தல் 'வரும்' : மஹிந்த - sonakar.com

Post Top Ad

Monday 27 March 2023

டிசம்பருக்குள் தேர்தல் 'வரும்' : மஹிந்த

 



உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப் போவது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், டிசம்பருக்குள் தேர்தல் ஒன்று இடம்பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு ரணில் ஆராய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, பெரமுனவினர் பதவி கேட்டு பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில், நாடாளுமன்றைக் கலைக்கக் கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக அரசியல் மட்டத்தில் பேச்சு நிலவுகிறது.


இந்நிலையில், டிசம்பருக்குள் ஒரு தேர்தல் பற்றி மஹிந்த ராஜபக்ச 'சமிக்ஞை' வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment