இலங்கை 'எரிபொருள்' சந்தைக்குள் அமெரிக்கா - சீனா - sonakar.com

Post Top Ad

Monday 27 March 2023

இலங்கை 'எரிபொருள்' சந்தைக்குள் அமெரிக்கா - சீனா

 இலங்கையின் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக சந்தைக்குள் அமெரிக்கா - சீனா மற்றும் அவுஸ்திரேலிய நிறுவனங்களை அனுமதிக்க இணங்கியுள்ளது அமைச்சரவை.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இயக்கப்படும் 450 எரிபொருள் நிலையங்கள் தலா 150 வீதம் குறித்த நாடுகளின் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன தகவல் வெளியிட்டுள்ளார்.


முதற்கட்டமாக 20 வருடங்களுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை ஏலவே இந்தியாவும் 'சந்தைக்குள்' ஆளுமை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment