தேர்தல் நிதியை தடுக்க முடியாது: நீதிமன்றம் - sonakar.com

Post Top Ad

Friday 3 March 2023

தேர்தல் நிதியை தடுக்க முடியாது: நீதிமன்றம்

 உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வழங்குவதை நிதியமைச்சின் செயலாளர் தடுத்து வைத்திருப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


வரவு-செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்ட இந்நிதியை நிதியமைச்சு வழங்க வேண்டும் எனவும், இவ்வாறு தடுப்பது அடிப்படை உரிமை மீறல் எனவும் சமகி ஜனபல வேகய தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கமையவே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


தேர்தலுக்கான புதிய தேதி இன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment