மைத்ரியின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - sonakar.com

Post Top Ad

Wednesday 1 March 2023

மைத்ரியின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

 



ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலிருந்து தப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம்.


ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்க்கத் தவறியதன் பின்னணியில், ஜனாதிபதியாக இருந்த மைத்ரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்த வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


எனினும், தனக்கென சொந்தமாக சொத்தெதுவுமில்லையெனவும் மக்களிடம் நிதி சேர்த்தே வழங்க வேண்டும் எனவும் மைத்ரி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment