உள்ளூராட்சி மன்ற தேர்தல் மே மாதம் வரை நடப்பதற்கான சாத்தியக்கூறு இல்லையென தெரிவிக்கிறார் அநுர குமார திசாநாயக்க.
புதிய தேதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அரசாங்கம் தோல்வியின் அச்சத்தாலேயே தேர்தலை பின் போட்டு வருவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
தேர்தலை நடாத்த நாடாளுமன்றம் நிதி ஒதுக்க வேண்டும் என ஏலவே எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment