தேர்தலுக்கு நாடாளுமன்றூடாக 'நிதி': சஜித் வலியுறுத்து - sonakar.com

Post Top Ad

Tuesday 28 February 2023

தேர்தலுக்கு நாடாளுமன்றூடாக 'நிதி': சஜித் வலியுறுத்து

 



நிதிப் பிரச்சினையை முன் வைத்து அரசாங்கம் தேர்தலை பின் போட முனைவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விசேட பிரேரணை மூலம் நாடாளுமன்றம் தேர்தலுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பில் ஏலவே தேர்தல் ஆணைக்குழு தலைவர் சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்றம் இதற்கான வழி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பு சட்டபூர்வமானதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தேதியை அறிவிக்க முடியுமா என்பது தொடர்பில் இழுபறி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment