ஆசியாவில் நீரிழிவு பாதிப்பு அதிகமுள்ள நாடு இலங்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 22 February 2023

ஆசியாவில் நீரிழிவு பாதிப்பு அதிகமுள்ள நாடு இலங்கை

 



ஆசிய நாடுகளிலேயே அதிகளவான நீரிழிவு பாதிப்புள்ள நாடு இலங்கையென தகவல் வெளியிட்டுள்ளது சுகாதார கொள்கைகளுக்கான நிறுவனம் (Institute for Health Policy - IHP).


குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் பிரகாரம் இலங்கையில் நான்கில் ஒருவர் (வயது வந்தோர்) நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயர் இரத்த அழுத்த பாதிப்பும் அதிகம் நிலவுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, முக்கிய நகரங்களில் மூன்றில் ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், பருமன் அதிகரித்துக் காணப்படுவது முக்கிய காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment