நிதிப் பிரச்சினையை முற்படுத்தி தேர்தலை பின் போடுவதற்கு அரசு முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தேர்தலை நடாத்துவதற்கு உள்ளூரிலேயே நிதி சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் பாதுக்க மக்கள்.
இப்பின்னணயில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தபால் நிலையம் ஊடாக பண ஆணையை அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிப்படை உரிமையை பாதுகாக்க அரசு தவறி வருவதால் அதற்கான போராட்டமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment