உள்ளூராட்சி தேர்தலில் ஏனைய கட்சிகள் ஊடாக போட்டியிட முனைந்தவர்கள், ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தவர்கள் என 1137 பேரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.
கடந்த பொதுத் தேர்தலில் படு தோல்வியைக் கண்ட போதிலும், கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாகியுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் மீண்டும் தலையெக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்சி சீர் திருத்தங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment