ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கனடா அறிவித்துள்ள 'தடைகள்' தவறானது என்கிறார் நாமல் ராஜபக்ச.
30 வருட காலத்தில் விடுதலைப்புலிகள் சிறார்களை இணைத்து, அநீதியிழைத்ததையெல்லாம் மறந்து இறுதி யுத்தத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் இருந்தமை மாத்திரம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் தெரிவிக்கிறார்.
ராஜபக்ச குடும்பத்தினர் அடிப்படை மனித உரிமைகளை மதிக்கத் தவறியவர்கள் என்ற பின்னணியில் மஹிந்த, கோட்டா உட்பட்டோருக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடை விதித்துள்ளதுடன், தமது நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அறிவித்துள்ளமையும் இந்நடவடிக்கை ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப்படக் கூடும் என்ற அச்சம் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment