மைத்ரிபால 100 மில்லியன் இழப்பீடு செலுத்த உத்தரவு - sonakar.com

Post Top Ad

Thursday 12 January 2023

மைத்ரிபால 100 மில்லியன் இழப்பீடு செலுத்த உத்தரவு

 



ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.


இப்பின்னணியில் மைத்ரிபால சிறிசேன 100 மில்லியன், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் மற்றும் அக்காலப்பகுதியில் அரச புலனாய்வுத்துறை இயக்குனர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ 50 மில்லியன் ரூபா செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.


2019 தாக்குதலின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த நபர்களுக்கு எதிராக இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment