ஆளுங்கட்சி MPக்கள் வெளிநாடு செல்ல புதிய கட்டுப்பாடு - sonakar.com

Post Top Ad

Tuesday 1 November 2022

ஆளுங்கட்சி MPக்கள் வெளிநாடு செல்ல புதிய கட்டுப்பாடு

 


 நாடாளுமன்ற விவாதங்கள், வரவு - செலவுத் திட்டம் மற்றும் முக்கிய பிரேரணைகள் பற்றிய வாத - விவாதங்கள் இடம்பெறும் போது ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது அமைச்சரவை.


பிரதமரால் முன் வைக்கப்பட்ட இவ் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள அதேவேளை அமைச்சுப் பதவிகள் கேட்டு ஆளுந்தரப்பின் ஒரு பகுதியினர் பிரளயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த காலங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கும், விசய விடயத்திலிருந்து தப்பிக்கொள்வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்லும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment