பண்டிகைக் காலத்துக்கான சமையல் எரிவாயு கேள்வி அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள லிட்ரோ நிறுவனம், எதிர்வரும் புதன் கிழமை வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு விநியோகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பதற்றம் உருவாகி வரும் நிலையில், லிட்ரோ நிறுவனம் முன் கூட்டியே விளக்கமளித்துள்ளது.
34,000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு எதிர்பார்க்கப்படுவதாகவும் கப்பற் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment