2023 முற்பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் பசில் ராஜபக்ச, புதிய திட்டத்துடன் வரப் போவதாக உற்சாகம் வெளியிட்டுள்ளனர் பொதுஜன பெரமுனவினர்.
தற்போது தமது கட்சி கண்டுள்ள பின்னடைவைத் தகர்த்து மீண்டும் வெற்றிப் பாதைக்குச் செல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டை நிர்வகிக்கத் தெரியாது பொருளாதாரத்தை அதாள பாதாளத்துக்கு தள்ளியதாக குற்றஞ்சாட்டிய மக்கள் பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு, கோட்டாபய ராஜபக்சவை அகற்றியதும் அடங்கிப் போனமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment