கஞ்சா ஏற்றுமதிக்கான காலம் வந்து விட்டது: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Thursday 17 November 2022

கஞ்சா ஏற்றுமதிக்கான காலம் வந்து விட்டது: அமைச்சர்

 இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படுவதுடன் கூடிய விரைவில் ஏற்றுமதியும் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி.


நாட்டில் கஞ்சா பயிர்ச்செய்கை மற்றும் இரவு நேர கேளிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று தற்போது வெளிநாட்டு பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.


எனினும், அவரிடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இருக்கவில்லையென தெரிவிக்கின்ற சிசிர, தாம் அதனை திட்டமிட்டுச் செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment