5 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத பிக்கு கைது - sonakar.com

Post Top Ad

Friday 4 November 2022

5 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத பிக்கு கைது

 



ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 18 நாட்கள் தங்கியிருந்து விட்டு, கட்டணத்தை செலுத்தத் தவறிய பௌத்த துறவியொருவர் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மஹியங்கனை விகாரையில் பணியாற்றி வந்த குறித்த நபர், கட்டணத்தை செலுத்தாது ஹோட்டலை விட்டு வெளியே சென்றுள்ள அதேவேளை, தாம் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நலமானதும் கட்டண நிலுவையை செலுத்தப் போவதாகவும் முன்னர் தெரிவித்துள்ளார்.


எனினும், வைத்தியசாலையை விட்டு வெளியேறிய பின்னர் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்த நிலையில், ஹோட்டல் நிர்வாகத்தின் முறைப்பாட்டின் பேரில் சி.ஐ.டியினர் பிக்குவை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment