கட்டாரிலிருந்து அவசர மருத்துவ உதவி - sonakar.com

Post Top Ad

Friday 4 November 2022

கட்டாரிலிருந்து அவசர மருத்துவ உதவி

 

பொருளாதார ரீதியாக வெகுவாக நலிவடைந்துள்ள இலங்கைக்கு வெளிநாடுகள் அவசர மருத்துவ உதவிகளை வழங்கி வரும் தொடர்ச்சியில் கட்டார், சுமார் 4.7 தொன் எடையுள்ள மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.


இலங்கைக்கான கட்டார் தூதர் ஜசிம் பின் ஜபர், இதனை சம்பிரதாயபூர்வமாக சுகாதார அமைச்சர் கெஹலியவிடம் கையளித்துள்ளார்.


இலங்கையின் மருத்துவத்துறை எதிர்நோக்கும் சவால்களை இலகுபடுத்துவதற்கு இவ்வுதவி பயன்பெறும் என கட்டார் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment