பதவி 'நோயால்' பீடிக்கப்பட்டுள்ளது SLFP: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Sunday 2 October 2022

பதவி 'நோயால்' பீடிக்கப்பட்டுள்ளது SLFP: மைத்ரி

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு பதவி இல்லாமல் இருக்க முடியாது என்கிற நோய் பிடித்துள்ளதால் விமோட்சனம் இல்லையென்கிறார் மைத்ரிபால சிறிசேன.


ஆரம்ப காலந் தொட்டே கட்சியில் இந்த வியாதி இருந்து வந்ததாக தெரிவிக்கின்ற அவர், ஜே.ஆர் - பிரேமதாச காலத்துக்குப் பின்னர் 24 வருடங்கள் பதவியில் இருந்ததால் அந்த நோய் இன்னும் வலுப் பெற்று தற்போது உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.


சிறிமாவின் குடியுரிமை பறிக்கப்பட்ட போதெல்லாம் எதுவித எதிர்பார்ப்புமின்றி உரிமைப் போராட்டத்தில் இறங்கி சிறை சென்ற தமது தியாகங்கள் இன்றைய சூழ்நிலையில் மழுங்கிப் போவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment