ஆயிரக்கணக்கான 'ஆரோக்கியமற்ற' பொலிசார்: IGP - sonakar.com

Post Top Ad

Wednesday 26 October 2022

ஆயிரக்கணக்கான 'ஆரோக்கியமற்ற' பொலிசார்: IGP

 



ஸ்ரீலங்கொ பொலிசில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட, உடல் ஆரோக்கியமற்றோர் தொடர்ந்தும் பணியிலிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன.


பொலிசில் கடமையாற்றுவதற்கு தேவையான உடல் ஆரோக்கியமற்ற நிலையில், நீண்ட கால மருத்துவ பிரச்சினைகள் உள்ள ஆயிரக்கணக்கானோர் உள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கையெடுப்பதற்கு அமைச்சு மட்டத்தில் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இவ்வருடம் ஓய்வு பெறுவோரின் தொகையும் அதிகமாகவுள்ள நிலையில், சுமார் 16,000 பேரை புதிதாக இணைத்துக் கொள்ள முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment