கஞ்சா வளர்ப்பை அனுமதிக்க அமைச்சரவைப் பத்திரம் - sonakar.com

Post Top Ad

Wednesday 26 October 2022

கஞ்சா வளர்ப்பை அனுமதிக்க அமைச்சரவைப் பத்திரம்

 கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டரீதியாக அனுமதிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி.


தற்சமயம் உள்ள சட்டத்தின் பிரகாரம் மருத்துவ தேவைகளுக்காக மாத்திரமே கஞ்சா வளர்ப்புக்கு அனுமதியுள்ளதாகவும் அதனை மேலும் விரிவு படுத்துவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


பெரமுன ஆட்சியமைக்கப்பட்ட தருணத்திலிருந்து இலங்கையை கஞ்சா ஏற்றுமதி நாடாக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment