பிரதமர் பதவியை மஹிந்தவுக்கு பெற்றுக்கொள்ள முயற்சி - sonakar.com

Post Top Ad

Sunday 9 October 2022

பிரதமர் பதவியை மஹிந்தவுக்கு பெற்றுக்கொள்ள முயற்சி

 



மே 9 வன்முறைகளின் பின்னர் கேள்விக்குறியான ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் பலப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


இந்நிலையில், களுத்துறையில் எழுச்சிக் கூட்டம் நடாத்திய பொதுஜன பெரமுன கட்சியும் ராஜபக்சக்களும் மீண்டும் விட்ட இடத்தைப் பிடிப்பார்கள் என ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சூளுரைத்துள்ளார்.


அத்துடன், நாமல் ராஜபக்ச மீண்டும் தீவிர அரசியலில் இயங்கும் வகையில் தேசிய சபையின் உப குழு தலைவர் பதவியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமையும் மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment