பொருளாதார சீரழிப்பு; வழக்கை முன்னெடுக்க அனுமதி - sonakar.com

Post Top Ad

Friday 7 October 2022

பொருளாதார சீரழிப்பு; வழக்கை முன்னெடுக்க அனுமதி

  நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியதற்கான பொறுப்பாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தியாக வேண்டும் என்று அரச சார்பற்ற நிறுவனமான டிரன்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் தொடுத்திருந்த வழக்கு விசாரணையை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.


மஹிந்த, கோட்டாபய மற்றும் பசில் உட்பல முன்னாள் அரசின் பொருளாதார முகாமைத்துவத்துக்கு பொறுப்பாளிகளாகவிருந்த முக்கிய நபர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இவ்வழக்குப் பதியப்பட்டிருந்தது.


இந்நிலையில், ஜனவரி மாத விசாரணைக்கு அரச தரப்பிலிருந்து ஆவணங்கள், தொடர்பாடல் விபரங்கள் மற்றும் கடந்த கால முன்னெடுப்புகள் பற்றிய முழுமையான விபரத்தை ஒப்படைக்கவும் ஐவர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment