இரு மாதங்களில் மீண்டும் மக்கள் புரட்சி: மரிக்கார் - sonakar.com

Post Top Ad

Sunday 9 October 2022

இரு மாதங்களில் மீண்டும் மக்கள் புரட்சி: மரிக்கார்

 



இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் மக்கள் புரட்சியொன்று வெடிக்கவுள்ளதாகவும் அதற்கு எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய தலைமைத்துவத்தை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கிறார் எஸ்.எம். மரிக்கார்.


நடைமுறை அரசு, மக்களை ஏமாற்றி வருவது மாத்திரமன்றி சர்வதேச மட்டத்தில் தோல்வி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்ற அவர், இம்முறை ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இதுவரை இலங்கை எதிர்கொண்டிராத கடுமையான நிலைப்பாடு எனவும் விளக்கமளித்துள்ளார்.


தற்போது மீண்டும் ராஜபக்ச அலையைத் தோற்றுவிக்க பெரமுன முயல்கின்ற நிலையில் சமகி ஜன பல வேகய போராட்டங்களைத் தூண்டவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment