விமான நிலையத்தில் திருப்பியனுப்பப் பட்ட ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Friday 28 October 2022

விமான நிலையத்தில் திருப்பியனுப்பப் பட்ட ரஞ்சன்

 அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற ரஞ்சன் ராமநாயக்க திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


எனினும், தனக்கெதிராக பிரயாணத் தடை எதுவுமில்லையென்பதை தனது சட்டத்தரணி உறுதி செய்துள்ளதாகவும், விமான நிலைய கணிணியில் தகவல் புதுப்பிக்கப்படாமையே தனது பயணத் தடைக்கு காரணம் எனவும் ரஞ்சன் விளக்கமளித்துள்ளார்.


இப்பின்னணியில், மீண்டும் இன்றிரவு ரஞ்சன் விமான நிலையம் செல்லவுள்ளதாகவும் அமெரிக்கா பயணிப்பது உறுதியெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment