அரசை கொண்டிழுப்பது ரணிலின் நோக்கமில்லை: அகில - sonakar.com

Post Top Ad

Thursday, 27 October 2022

அரசை கொண்டிழுப்பது ரணிலின் நோக்கமில்லை: அகில

 நடைமுறை அரசை இதே நிலையில் கொண்டிழுப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமில்லையென தெரிவிக்கிறார் அவரது ஆலோசகரான அகில விராஜ் காரியவசம்.


கூடிய விரைவில் தேர்தலை நடாத்துவதையே ஜனாதிபதி விரும்புவதாகவும் அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெடுப்ப, புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கும் வியூகங்கள் வருக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நவம்பர் முற்பகுதியில் 2023ம் வருடத்துக்கான வரவு - செலவுத் திட்;டம் முன் வைக்கப்படவுள்ள நிலையில், பெரமுன தரப்பினர் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment