மொட்டு லடாய்: சாகரவை 'அடிக்க' காத்திருக்கும் பிரசன்ன  - sonakar.com

Post Top Ad

Tuesday 25 October 2022

 மொட்டு லடாய்: சாகரவை 'அடிக்க' காத்திருக்கும் பிரசன்ன 

 22ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பசில் தரப்பினர் கட்சி மட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கெதிரான அணியினர் பொறுமை இழந்துள்ளதாக அக்கட்சியிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்பின்னணியில், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுபபினர்கள் கூட்டத்தில் வைத்து கட்சி செயலாளரும் பசில் ராஜபக்சவின் குரலாக இயங்குபவருமான சாகர காரிவசத்தினை தாக்குவதற்கு பிரசன்ன ரணவீர பாய்ந்து செல்ல, அதனை தினேஷ் குணவர்தன தடுத்துள்ளதாக விமல் வீரவன்ச தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


பெரமுனவுக்குள் உட்கட்சிப் பூசல் வலுத்து வரும் அதேவேளை நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டு எஞ்சியிருக்கும் காலத்துக்குள் அடுத்த தேர்தலுககான முதலீட்டை மேற்கொள்ள கடும் கருத்து மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment