பௌத்த நாடென்பதால் இலங்கை 'பாதுகாப்பானது' : அமைச்சு - sonakar.com

Post Top Ad

Thursday 20 October 2022

பௌத்த நாடென்பதால் இலங்கை 'பாதுகாப்பானது' : அமைச்சு

 


இலங்கையின் பெரும்பான்மை மக்கள் பௌத்தர்கள் என்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை பாதுகாப்பான இடம் என தெரிவிக்கிறது சுற்றுலாத்துறை அமைச்சு.


பிறிதொரு இணையத்தளத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்துள்ளமையை ஆதாரங்காட்டி அமைச்சு தரப்பிலிருந்து இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சீகிரி சிறந்த இடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை, புத்தரின் உருவப்படத்தினை பச்சை குத்தியிருந்த காரணத்தினால் கடந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அசௌகரியத்துக்குள்ளாகியிருந்த சம்வங்களும் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment