பிரதமராகப் போகும் ரிஷி: சந்திரிக்கா பெருமிதம் - sonakar.com

Post Top Ad

Tuesday 25 October 2022

பிரதமராகப் போகும் ரிஷி: சந்திரிக்கா பெருமிதம்

  



ஐக்கிய இராச்சியத்தின் அடுத்த பிரதமராகவுள்ள ரிஷி சுனக்கின் நியமனம் தெற்காசிய நாடுகளுக்கு சிறந்த உதாரணம் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாராநாயக்க.


யுக்ரைன் யுத்தத்தினை அடுத்து, பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வரும் ஐக்கிய இராச்சியத்தில் அண்மைக்காலமாக அரசியல் தளம்பல் நிலை உருவாகியுள்ளது. கன்சர்வடிவ் கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்குள் மூன்றாவது பிரதமரை நியமிக்கும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற பெரும்பான்மையை குறித்த கட்சி கொண்டிருப்பதால் அக்கட்சியின் தலைவரே பிரதமர் பதவி வகிப்பதோடு கடந்த தடவை பின் தள்ளப்பட்ட ரிஷி இம்முறை பெரும்பான்மை ஆதரவுடன் கட்சித் தலைவராகியுள்ளமையும், தெற்காசிய பூர்வீகம் கொண்ட ஒருவருக்கு நாட்டை ஆளும் அதிகாரத்தை வழங்கியதன் ஊடாக சிறந்த ஜனநாயக முறைமையை ருஐக்கிய இராச்சிய அரசியல் முன் வைத்துள்ளதாகவும் சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment