மைத்ரி - தயாசிறிக்கு நீதிமன்ற அழைப்பாணை - sonakar.com

Post Top Ad

Thursday, 13 October 2022

மைத்ரி - தயாசிறிக்கு நீதிமன்ற அழைப்பாணை

 கட்சி முடிவுக்கு எதிராக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வழங்கப்பட்டிருந்த பதவிகள் பறிக்கப்பட்டதனை எதிர்த்து நிமல் சிறிபால டிசில்வா தாக்கல் செய்திருந்த மனுவின் பின்னணியில் சுதந்திரக் கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்கும் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்து வரும் அதேவேளை பல உறுப்பினர்கள் பதவி நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் மைத்ரிபால தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்வரும் 19ம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


நிமல், ரஞ்சித், அமரவீர உட்பட்ட பிரமுகர்கள் மைத்ரியைப் புறந்தள்ளி பதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment