இலங்கையில் 'கொந்தராத்து' லஞ்சம்; இரு அவுஸ்திரேலியர்கள் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday 11 October 2022

இலங்கையில் 'கொந்தராத்து' லஞ்சம்; இரு அவுஸ்திரேலியர்கள் கைது


  


இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கட்டுமான கொந்தராத்து பெற முயன்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் பிரபல கட்டிட நிர்மாண நிறுவனத்தின் இரு நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.


2009 - 2016 வரையான காலப்பகுதியில் மூன்று லட்சத்துக்கு அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை இவ்வாறு லஞ்சமாகக் கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் பிரபல SMEC International Pty Ltd நிறுவனத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கை மற்றும் பங்களதேஷில் குறித்த நபர்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்து நிர்மாணப் பணிகள் சார்ந்த கொந்தராத்துகளைப் பெற முயன்றதாக தெரிவிக்கப்படுவதுடன், நாளை மறு தினம் இது தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment