விமல் - டலஸ் குழு 'இணைய' பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Wednesday 21 September 2022

விமல் - டலஸ் குழு 'இணைய' பேச்சுவார்த்தை

 



விமல் - வாசு - கம்மன்பிலவினர் இணைந்து உருவாக்கியுள்ள மேல் சபையையும் பெரமுன அதிருப்தி அணியாக இயங்கும் டலஸ் குழுவையும் இணைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனை ஏற்றுக் கொண்டுள்ள வாசுதேவ நானாயக்கார கட்சி மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக உறுதி செய்துள்ளார்.


பெரமுன அரசை உருவாக்குவதற்கு கடுமையாக உழைத்த போதிலும் பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகளால் விமல் அணியினர் பதவி பறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதாக கம்மன்பிலவினர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment