மது விலை குறைந்தால் போசாக்கு குறைபாடு நீங்கும்: கெமுனு - sonakar.com

Post Top Ad

Wednesday 21 September 2022

மது விலை குறைந்தால் போசாக்கு குறைபாடு நீங்கும்: கெமுனு

 நாட்டில் போசாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கான தீர்வொன்றை வழி மொழிந்துள்ளார் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன.


ஒன்றில் அனைத்து மது சாலைகளும் மூடப்பட வேண்டும் அல்லது மது பானங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்ற அவர், அதனூடாக தனது 'களைப்புக்காக' மது அருந்துவோரின் செலவு குறையும் என விளக்கமும் அளித்துள்ளார்.


மது விலை வெகுவாக உயர்ந்துள்ளதாலேயே வீடுகளில் குழந்தைகள் போசாக்கின்மையை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment