தாமரை கோபுர 'வருவாய்' போதாது: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Monday, 26 September 2022

தாமரை கோபுர 'வருவாய்' போதாது: சம்பிக்க

 நாளொன்றுக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் இருந்தால் மாத்திரமே தாமரை கோபுரத்தை நிர்மாணிக்கப் பெற்றுக் கொண்ட கடனை அடைக்க முடியும் என்கிற நிலையில், தற்போதைய வருமான அளவையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது என்கிறார் சம்பிக்க ரணவக்க.


3 மில்லியன் ரூபா கடனை திருப்பி செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தற்போது தாமரை கோபுரம் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, வருவாய் போதாது என சம்பிக்க தெரிவித்துள்ளார்.


இன்னும் ஐந்து வருடங்களுக்குள் ஐந்து கோடியே அறுபது லட்சம் டொலர் தேவைப்படுவதாகவும், நிர்மாண செலவு, கடன், அதற்கான வட்டி, காப்புறுதியென அனைத்து கட்டணங்களும் இதில் உள்ளடங்கும் எனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment