ஈஸ்டர் விவகாரம்; ரணிலுக்கு எதிராக வழக்காட முடியாது! - sonakar.com

Post Top Ad

Monday, 26 September 2022

ஈஸ்டர் விவகாரம்; ரணிலுக்கு எதிராக வழக்காட முடியாது!

  ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கத் தவறியதனூடாக அடிப்படை உரிமைகளை மீறியதாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவைத் தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


அரசியலமைப்பின் பிரகாரம், நடைமுறையில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக இவ்வாறு வழக்காட முடியாது என சுட்டிக்காட்டியுள்ள ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு, ஜனாதிபதியின் கடமைகளுக்கு இடையூறு இழைக்கும் வகையில் வழக்காடுவதற்கு சட்டத்தில் இடமில்லையென விளக்கமளித்துள்ளது.


ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இன்னும் நீதி கிடைக்கவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment