பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றுள்ள நிலையில் அவரது பொறுப்புகள் ஐவரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் பாதுகாப்பு பதில் அமைச்சராக ஜனக பண்டார தென்னகோனும், பதில் நிதியமைச்சராக ரஞ்சித் சியம்பலபிட்டியவும் எதிர்வரும் செவ்வாய் வரை பணியாற்றவுள்ளதோடு கீதா குமாரசிங்க, கனக ஹேரத் மற்றும் திலும் அமுனுகவுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் செவ்வாய்க் கிழமை ஜனாதிபதி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment