வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க மாலை அபகரித்த குற்றச் செயலின் பின்னணியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ரத்னபுரியில் இடம்பெற்றுள்ளது.
பானமுர பகுதியில் இவ்வாறு அபகரிக்கப்பட்ட தங்க மாலை, சுமார் 338,000 ரூபா பெறுமதியானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்தொட்ட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த நபர் வேறு ஒரு மாலைத் திருட்டு சம்பவத்திலும் தொடர்பு பட்டிருப்பதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment