நாடாளுமன்றைக் 'கலைக்க' பெரமுன கடும் எதிர்ப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 24 September 2022

நாடாளுமன்றைக் 'கலைக்க' பெரமுன கடும் எதிர்ப்பு

 எதிர்வரும் மார்ச் அளவில் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு ரணில் தரப்பு ஆலோசித்து வருகின்ற நிலையில், பெரமுனவினர் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.


மார்ச் மாதத்தின் பின் நாடாளுமன்றைக் கலைப்பதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணிலுக்கு இருக்கின்ற நிலையில், இதனை அவர் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும், பெரமுன தயவில் ஜனாதிபதியான அவரை அவ்வாறு செய்ய விட முடியாது என அக்கட்சியினர் தெரிவிப்பதோடு நாடாளுமன்ற பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment