நசீர் - தினேஷ் சகிதம் சவுதி தேசிய தின நிகழ்வில் ஞானசார - sonakar.com

Post Top Ad

Saturday 24 September 2022

நசீர் - தினேஷ் சகிதம் சவுதி தேசிய தின நிகழ்வில் ஞானசார

 



பொது பல சேனா பயங்கரவாத அமைப்பைத் தோற்றுவித்து, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைச் செயற்பாடுகளைத் தூண்டியதன் ஊடாக பிரபலம் பெற்ற ஞானசார மற்றும் அவரது அமைப்பினர் சவுதி தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.


சவுதி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் நசீர் அஹமது, சாகல ரத்நாயக்க, தினேஷ் குணவர்தன உட்பட்ட அரச பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


மஹிந்தவுக்கு எதிரான மக்கள் புரட்சி வெடித்திருந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஞானசார முதற்தடவையாக பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Naleem said...

இந்த பயங்கர வாதிக்கு அங்கு என்ன வேலை அந்த அயோக்கியனை ஏன் அங்கே கொண்டு வந்த அவனை அழைத்து வந்தது யார் இவன் ஜெயிலில் இருக்க வேண்டியவன்

Post a Comment