வங்கிக் கொள்ளை; மொட்டு முக்கியஸ்தர் இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 September 2022

வங்கிக் கொள்ளை; மொட்டு முக்கியஸ்தர் இடை நிறுத்தம்

 22.3 மில்லியன் ரூபா வங்கிக் கொள்ளையின் பின்னணியில் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினரை கட்சியிலிருந்து இடை நிறுத்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது பொதுஜன பெரமுன.


தம்புட்டேகம தனியார் வங்கியில் வைப்பிலிடக் கொண்டு செல்லப்பட்ட பணத்தை கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பின்னணியில் ராஜங்கனய பிரதேச சபை உறுப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும் தேவையான வாகனங்களை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.


இந்நிலையில், ஏலவே நாட்டைக் கொள்ளையிட்ட பாரிய குற்றச்சாட்டுகளை சுமந்து வரும் பெரமுன, குறித்த நபரின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment