புதிய ஓய்வு பெறும் வயதால் பாரிய சிக்கல்: AMS - sonakar.com

Post Top Ad

Thursday 22 September 2022

புதிய ஓய்வு பெறும் வயதால் பாரிய சிக்கல்: AMS

 ஓய்வு பெறும் வயது 60 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு துறைகளில் சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும் குறிப்பாக மருத்துவ துறை பாரிய சவால்களை எதிர் நோக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.


விசேட மருத்துவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, புதிய ஓய்வு பெறும் வயதினால் 300 விசேட வைத்திய நிபுணர்களும் 3100 மருத்துவர்களும் விரைவாக ஓய்வு பெறவுள்ளதாகவும் இதனால் கிராமப்புறங்களில் மருத்துவத்துறை பெருமளவு பாதிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இரசாயன பசளை இறக்குமதியைத் தடை செய்தது போன்ற தூர நோக்கற்ற நடவடிக்கையாகவே இதைப் பார்ப்பதாகவும் இதனூடாக வரப் போகும் சவால்கள் பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் எனவும் குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment