தாமரை கோபுரம்; ஞாயிறு வரை 11 மில்லியன் வருவாய் - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 September 2022

தாமரை கோபுரம்; ஞாயிறு வரை 11 மில்லியன் வருவாய்

 தாமரை கோபுரம் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டதிலிருந்து கடந்த ஞாயிறு 18ம் திகதி வரையான காலப்பகுதியில் 25,000 பேர் அங்கு விஜயம் செய்துள்ளதாக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.


இப்பின்னணியில், ஞாயிறு வரை 11 மில்லியன் ரூபா வருவாய் பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டவரை விட உள்நாட்டவரே அதிகமாக அங்கு செல்கின்ற அதேவேளை, எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரக்கூடிய இடமாக மாறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment