எலிசபத் மகாராணியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள லண்டன் சென்ற ரணில் விக்கிரமசிங்க எதற்காக தன்னோடு பத்துப் பேர் கொண்ட பட்டாளத்தை அழைத்துச் சென்றார் என கேள்வியெழுப்பியுள்ளார் குமார வெல்கம.
மூன்று பேர் சென்றிருந்தாலே போதுமானது என தெரிவிக்கின்ற அவர், நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் இவ்வாறு பெருமளவானோரை அழைத்துச் செல்ல வேண்டிய தேவையெதுவும் இல்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவும் இவ்வாறு பெரும் படையுடன் வெளிநாடு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் வெல்கம விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment