ரணிலை வைத்து செய்த 'பரீட்சார்த்தம்' வெற்றி: SLPP - sonakar.com

Post Top Ad

Tuesday 9 August 2022

ரணிலை வைத்து செய்த 'பரீட்சார்த்தம்' வெற்றி: SLPP

 


ரணில் விக்கிரமசிங்கவை வைத்து பெரமுன கட்சியினர் நடாத்திய பரீட்சார்த்தம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஹேரத்.


தற்போது நாட்டில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் தேவைகள் குறைந்து வருவதாகவும் தமது கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுக்கு தகுந்த பலன் கிடைத்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, பெரமுன தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்துத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக அரசியல் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment